விபரீத விளையாட்டை வேடிக்கை பார்த்த தலைமை ஆசிரியர்; பள்ளி மாணவர் பலி!
ஞாயிறு, 15 ஏப்ரல் 2018 (18:46 IST)
பாகிஸ்தான் பள்ளியில் அறைந்து விளையாடிய மாணவர்களின் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் ஒருவரையொருவர் அறைந்து விளையாடும் விபரீத விளையாட்டு பிரபலமாக உள்ளது.
அரசு பள்ளியில் இடைவேளையின் போது பிலால் மற்றும் ஆமீர் என்ற மாணவர்கள் ஒருவரையொருவர் பலமாக அறைந்தபடி விளையாடினர். இந்த விளையாட்டை பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்பட எல்லோரும் வேடிக்கை பார்த்துள்ளனர்.
விளையாடி கொண்டிருக்கும் போதும் இருவரும் ஆவேசமாக அறைந்து கொண்டனர். அப்போது பிலால் அடி தாங்க முடியாமல் மயங்கி விழுந்தான். இதில் பிலால் உயிரிழந்தான். தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.