இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் உள்ள கேபெல்லா என்ற ஓட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இரு தலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின் போது, அணு ஆயுத கைவிடல், பொருளாதார பிரச்சினை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பேச்சு வார்த்தை சுமூகமாக இருந்ததாகவும், வட கொரியாவில் உள்ள அணு ஆயுத கிடங்குகள் முழுவதுமாக ஒழிக்கப்படும் என வடகொரிய அதிபர் கிம் ஜான் உன் தெரிவித்தார். மேலும் இனி உலகம் மிகப்பெரிய மாற்றத்தை பார்க்கும் என்றும் கிம் கூறினார்.