20ம் தேதி முதல் பொதுமக்கள் முகக்கவசம் அணிய கட்டாயமில்லை! பிரான்ஸ் அறிவிப்பு!

புதன், 16 ஜூன் 2021 (19:27 IST)
வரும் 20ஆம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டின் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என அந்நாட்டின் அரசு தெரிவித்துள்ளது
 
கடந்த ஆண்டு முதல் அலையில் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டு மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக பிரான்ஸ் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரண்டாவது அலையில் பிரான்ஸ் அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக தற்போது பிரான்ஸ் நாடு கிட்டத்தட்ட முழுவதுமாக கொரோனா வைரஸில் இருந்து மீண்டு உள்ளது
 
இதனை அடுத்து அந்நாட்டு அதிபர் ஜீன்ஸ்கேஸ்டக்ஸ் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் இதன்படி ஜூன் 20-ஆம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டில் ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்படும் என்றும் பொது மக்கள் முக கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் அறிவித்துள்ளார் இதனையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிரான்ஸ் போலவே மற்ற உலக நாடுகளும் விரைவில் குணம் வைரஸில் இருந்து முழு விடுதலை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்