இந்தநிலையில் இலங்கையில் தனக்கு தஞ்சம் கொடுக்குமாறு அந்நாட்டு அதிபருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்றும் கைலாசாவில் போதிய மருத்துவ சிகிச்சை அளிக்க முடியவில்லை என்றும் எனவே உடல் குறைபாட்டை சரிசெய்ய இலங்கை தனக்கு தஞ்சம் அளிக்க வேண்டும் என்றும் அந்நாட்டு அரசுக்கு நித்தியானந்தா கடிதம் எழுதியுள்ளார்