92 லட்சத்தை நெருங்கியது உலக கொரோனா பாதிப்பு: 5 லட்சத்தை நெருங்கும் உயிரிழப்புகள்

செவ்வாய், 23 ஜூன் 2020 (06:57 IST)
கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 91,85,229 பேர் பாதிப்பு அடைந்திருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92 லட்சத்தை நெருங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் உலகில் கொரோனாவில் இருந்து  குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 49,21,063 என்றும், உலகில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 4,74,237 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் கொரோனாவால் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 23,88,153ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கொரோனா வைரஸால் அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,22,610ஆக உயர்வு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,111,348 என்றும், ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 592,280 என்றும், இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 305,289என்றும், ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 293,584 என்றும், பெரு நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 257,447 என்றும், சிலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 246,963 என்றும், இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 238,720 என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 440,450ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கொரோனா வைரஸால் அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,015ஆக உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்