வியாழனை இதுவரை 79 நிலவுகள் சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 53 நிலவுகளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளன. 26 நிலவுகளுக்கு பெயர் சூட்டுவதற்கான ஆலோசனை நடந்து வருகிறது. இந்நிலையில் வியாழனின் நிலவுகளிலேயே மிகப்பெரிய நிலவான கேனிமெட்-ஐ 20 ஆண்டுகளுக்கு பிறகு மிக மிக நெருக்கமாக படம்பிடித்துள்ளது நாசா. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.