அட்லாண்டிக் பெருங்கடலின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட நீர் பரப்பைத்தான் பெர்முடா முக்கோணம் என்று அழைக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் சரியான கடலியல் அளவுகோளில் சொல்வதென்றால் புளோரிடா நீரிணை, பெர்முடா தீவு, கரீபியன் தீவுகள் ஆகிய மூன்று நிலப்பரப்புகளை ஒரு முக்கோணம் போல இணைக்கும் இந்தக் கடல் பகுதி முழுவதும் பெர்முடா ட்ராய்ங்கிள் என்று அழைக்கப்படுகிறது.
மெக்ஸிகோவில் குடியரசு தினத்தன்று நிகழ்த்த வேண்டிய சாகஸத்தை பயிற்சிசெய்து பார்க்க அந்தப் பகுதிக்குச் சென்றபோது பிளைட் 19 ரக விமானங்கள் ஐந்தும் மாயமாக மறைந்துபோயின. அந்த விமானங்களில் இருந்த ஒரு விமான ஓட்டி "நாங்கள் இப்போது வெள்ளைக் நிறத்தில் இருக்கும் தண்ணீருக்குள் போய்கொண்டிருக்கிறோம்.... இல்லை... இல்லை.. இந்தத் தண்ணி பச்சையா இருக்கு!” என்று சொன்னதாக அவரது குரல் பதிவாகியிருக்கிறது.