கடலில் 35 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வை மெக்ஸிகோவின் பல பகுதி மக்கள் உணர்ந்ததாகவும், கட்டிடங்கள் குலுங்கியதாகவும் கூறப்படுகிறது. மக்கள் பதற்றத்தால் வீதிகளுக்கு ஓடி வந்தனர். இதனால் மெக்ஸிகோவில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
மேலும் கடலின் 35 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மெக்சிகாத, கவுதமாலா, எல் சால்வடார், கோஸ்டாரிகா, நிகாரகுவா, பனாமா மற்றும் ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.