விக்கிபீடியாவை நம்ப வேண்டாம்: துணை நிறுவனர் திடுக்கிடும் தகவல்!

திங்கள், 19 ஜூலை 2021 (07:30 IST)
உலகிலுள்ள எந்த விவரங்கள் வேண்டுமானாலும் உடனடியாக விக்கிபீடியாவில் சென்று பார்ப்பது தான் அனைவரும் வழக்கமாக உள்ளது. ஆனால் விக்கிபீடியாவை நம்பவேண்டாம் என அதன் துணை நிறுவனராக இருந்த லாரிசான்ஜர் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
விக்கிப்பீடியாவை இனி யாரும் நம்ப வேண்டாம் என்றும் அது இடதுசாரிகள் பக்கம் சாய்ந்து விட்டதாகவும் அவர்களுக்கு எதிரான தகவல் நீக்கப்படுவதாக லாரிசான்ஜர் கூறியுள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு விக்கிப்பீடியாவில் இருந்து விலகிய லாரிசான்ஜர், விக்கிப்பீடியா தனது நம்பகத்தன்மையை இழந்து விட்டது என்றும் இடதுசாரிகளின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது என்றும் கூறியிருப்பது விக்கிப்பீடியா பயனாளிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ஆனால் லாரிசான்ஜர் கூற்றை விக்கிபீடியா நிர்வாகத்தினர் மறுத்துள்ளனர். விக்கிபீடியாவில் உள்ள விவரங்கள் பயனாளிகளே தொகுத்து வழங்கும்படி இருப்பதாகவும் எனவே அதன் நம்பகத்தன்மையை யாரும் சந்தேகம் செய்ய வேண்டாம் என்றும் விக்கிபீடியா தான் இன்று உலகின் நம்பர்-1 தகவல்களை கொடுக்கும் அமைப்பு என்றும் அவர் தெரிவித்துள்ளார். விக்கிபீடியாவில் இருந்து விலகியதால் லாரிசான்ஜர் அவ்வாறு அவதூறாக குற்றம் சாட்டுவதாகவும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்