இரண்டாம் உலகப்போர் வலுப்பெற்றிருந்த 1940களில் ஐரோப்பாவின் பல பகுதிகளில் குண்டுகள் வீசப்பட்டன. முசோலினியின் அதிகாரித்திலிருந்த இத்தாலி மீது பிரிட்டன் விமான படைகள் குண்டுகளை பொழிந்தன. இவ்வாறு வீசப்பட்ட குண்டுகள் பல இன்னமும் கண்டறியப்படாமல் உள்ளன. கட்டுமானப்பணிகளின்போது அடிக்கடி சில வெடிக்குண்டுகள் கண்டறியப்பட்டும் வருகின்றன.
இந்நிலையில் இத்தாலியில் உள்ள ரோமா பகுதியில் உள்ள கால்பந்து பயிற்சி மைதானத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வெடிக்குண்டு போன்ற பொருள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அறிந்து மைதானத்திற்கு விரைந்த இத்தாலி ராணுவம் மைதானம் முழுவதும் சோதனை மேற்கொண்டு 20 வெடிக்குண்டுகளை தோண்டி எடுத்துள்ளனர். இவை யாவும் இரண்டாம் உலக போர் சமயத்தில் இத்தாலியின் மீது வீசப்பட்டவை என்று தெரிய வந்துள்ளது.