பலனளிக்காத கோவுட் ஷீல்ட்; தயாரிப்பில் குழப்பம்! – அஸ்ட்ரா ஜெனிகா அறிவிப்பு!

வெள்ளி, 27 நவம்பர் 2020 (10:25 IST)
உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனாவை தடுக்க கண்டுபிடிக்கப்பட்ட கோவிட்ஷீல்ட் தடுப்பூசி தயாரிப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல நாடுகள் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அஸ்ட்ரா ஜெனிகா மற்றும் ஆக்ஸ்போர்டு இணைந்து தயாரித்த கோவிட்ஷீல்டு தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக கூறப்பட்டது. இந்த தடுப்பூசியை தன்னார்வலர்களிடம் சோதித்ததில் பக்க விளைவுகள் ஏற்பட்டதால் உடனடியாக பரிசோதனை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் மூன்றாவது மற்றும் இறுதி பரிசோதனையை தன்னார்வலர்களிடம் நடத்திய நிலையில் 1 டோஸ் கொடுக்கப்பட்டவர்கள் 90 சதவீதம் குணமடைந்துள்ளதும், 2 டோஸ் கொடுக்கப்பட்டவர்கள் 62 சதவீதம் குணமானதும் தெரிய வந்துள்ளது. இதனால் மருந்து தயாரிப்பில் ஏதோ குளறுபடி ஏற்பட்டிருக்கலாம் என அஸ்ட்ரா ஜெனிகா தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்