விஜய் மல்லையா, இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் ரூ. 9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு, திருப்பி தராமல் மோசடி செய்தார். மேலும் லண்டனுக்கு தப்பிச் சென்று அங்கேயே தங்கியுள்ளார். தன் மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளையும் அவர் சந்திக்க மறுத்து விட்டார்.
சமீபத்தில், இந்தியாவில் உள்ள அவரின் ரூ.1411 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாகக்த்துறை முடக்கியது. இந்நிலையில், பண மோசடி விவகாரத்தில் மத்திய அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்று, விஜய் மல்லையாவை அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்று பணமோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.
விஜய் மல்லையா புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டது சேத் கூறுகையில், யாருக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கவில்லை எனவும், விஜய் மல்லையா நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதை கவனித்த இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா உடனடியாக அங்கிருந்து சென்றார் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.