இந்தியாவின் 7வது வந்தே பாரத் ரயில் சேவை: டிசம்பர் 30ல் தொடங்கி வைக்கும் பிரதமர்
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (12:02 IST)
இந்தியாவின் அதிவேக ரயில் ஆன வந்தே பாரத் கடந்த சில மாதங்களாக அறிமுகம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே.
சமீபத்தில் கூட சென்னையில் இருந்து மைசூர் வரை வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டது என்பதும் இந்த ரயில் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் கட்டணம் இருந்தாலும் மிக விரைவில் செல்லும் இடம் சென்று விடலாம் என்பதால் பயணிகள் இந்த ரயிலை தேர்வு செய்து பயணம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியாவின் ஏழாவது வந்தே பாரத் ரயில் சேவை மேற்குவங்க மாநிலம் ஹவுரா மற்றும் நியூ ஜல்பைகுரி ஆகிய நகரங்களுக்கு இடையே இயக்கப்பட உள்ளது
இந்த ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று வெற்றி பெற்றதை அடுத்து இந்த ரயில் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது என்பதும், பிரதமர் நரேந்திர மோதி இந்த ரயிலை தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது