பாகிஸ்தானின் ரகிம்யார் கான் மாவட்டத்தில் 50 பேர் கொண்ட கும்பல் இந்து கோவில் ஒன்றிற்குள் நுழைந்து சிலைகளை அடித்து உடைத்ததுடன், அங்கிருந்த பொருட்களையும் சூறையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு இந்தியா கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கோவிலை சேதப்படுத்தியவர்களை கைது செய்யவும், கோவிலை மீண்டும் புணரமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என அவர் உறுதி அளித்துள்ளார்.