சரக்கு கப்பல்களை தாக்கிய ஹவுதி அமைப்பு; விமானப்படையை இறக்கி அதிரடி காட்டிய அமெரிக்கா!

புதன், 27 டிசம்பர் 2023 (09:35 IST)
சூயஸ் கால்வாய் வழியாக செல்லும் சரக்குக் கப்பல்களை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்கிய நிலையில் அவர்களது ஆளில்லா விமானங்களையும், ஏவுகணைகளையும் அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது.



ஏமன் பகுதியில் கோலோச்சி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு கடந்த சில காலமாக அவ்வழியாக சூயஸ் கால்வாய் செல்லும் சரக்குக் கப்பல்களை குறிவைத்து ஆளில்லா விமானங்கள் மூலமாகவும், ஏவுகணைகளை வீசியும் தாக்குதலை நடத்தி வருகிறது.

கப்பல் வணிகத்தில் முக்கிய கடல்வழிப்பாதையான சூயஸ் கால்வாய் அருகே ஹவுதி நடத்தி வரும் இந்த தாக்குதலால் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக அதிரடியில் இறங்கிய அமெரிக்க ராணுவம் சரக்குக் கப்பல்கள் செல்லும் கடல்பகுதியில் வந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள், ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்