மாஸ்க்லாம் போட முடியாது! – போராட்டத்தில் குதித்த ஜெர்மன் மக்கள்!

ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (08:52 IST)
ஜெர்மனியில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் நடைமுறையில் உள்ள நிலையில் அதை எதிர்ப்பு மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது. ஐரோப்பாவின் பல நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருந்தாலும் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது ஜெர்மனியில் பாதிப்பு குறைவாக உள்ளது. எனினும் அங்கு கடந்த ஏப்ரல் முதலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இந்நிலையில் ஜெர்மனியின் ஊரடங்கு உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் பெர்லினில் மக்கள் திரண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்ட பலர் மாஸ்க் அணியவில்லை, தவிரவும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான பதாதைகளை தாங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.

போராட்டத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை கண்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜெர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்