ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் மக்கள் வேகவேகமாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடந்த வெடிக்குண்டு தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் உட்பட 100 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து ட்ரோன் மூலம் நடந்த தாக்குதலில் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் காபூல் விமான நிலையத்தை மொத்தமாக ஒப்படைத்துவிட்டு அமெரிக்க வீரர்கள் வெளியேறிவிட்டனர். இந்நிலையில் கத்தார் உள்ளிட்ட நாடுகளின் தொழில்நுட்ப உதவியுடன் காபூல் விமான நிலையத்தை திறக்க தலிபான்கள் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டு விமான நிறுவனம் ஒன்றின் விமானம் நேற்று 10 பேரோடு தரையிறங்கியுள்ளது. தலிபான்கள் கைக்கு காபூல் சென்ற பின்னர் வந்த முதல் வெளிநாட்டு விமானம் இதுவாகும்.