தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவ தொடங்கிய வீரியமடைந்த கொரோனா திரிபான ஒமிக்ரான் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளன. இதனால் உலக நாடுகள் பலவும் ஒமிக்ரான் பாதிப்பை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
இதனைத்தொடர்ந்து ஒமிக்ரான் பரவல் எதிரொலியாக ஐரோப்பிய நாடுகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா வைரசின் ஒமிக்ரான் திரிபால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதைத் தொடர்ந்து ஐரோப்பாவின் சுகாதார கட்டமைப்பு பெரும் அழுத்தத்தை எதிர்கொள்ளும் என உலக சுகாதார நிறுவனத்தின் உயர் அதிகாரிகளில் ஒருவரான ஹான்ஸ் குளூக் எச்சரித்துள்ளார்.