டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையம் என பல நிறுவனங்கள் மூலம் உலகின் நம்பர் 1 பணக்காரராக விளங்கி வருபவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்புவதில் மும்முரமாக உள்ள இவர் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையிலான தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு ரூ.730 கோடி பரிசு என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். உலகம் கார்பன் வாயுக்கள் அதிகரிப்பால் பெரும் சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இப்படியான ஒரு கண்டுபிடிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களிலும் இந்த கண்டுபிடிப்பு பலன் அளிக்குமா என சோதிக்க உள்ளதாகவும் பேசிக்கொள்ளப்படுகிறது.