வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்கத் தயார் - மத்திய அமைச்சர் அறிவிப்பு

புதன், 20 ஜனவரி 2021 (21:01 IST)
மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ,மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களை ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கத்தயார் என தெரிவித்துள்ளார்.
 

டெல்லியில் தொடர்ந்து இன்று 66 -வது நாளாக மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி சலோ என்ற பெயரில்  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் விவசாயிகள். இன்று விவசாயிகள் 10 ஆம் கட்டமாக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

டெல்லியில் சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தங்களின் ரத்தத்தை மையாக மாற்றி பிரதமருக்கு கடிதம் எழுதியும், கடும் குளிரிலும் வெயிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பல கட்டங்களாக மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் இன்றும் பேச்சுவார்த்தைக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. ஆனால் இப்பேச்சுவார்த்தை தோல்வியுற்றதாகத் தகவல் வெளியாகிறது.

மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லி சலோ என்ற பெயரில் தொடர்ந்து 66 வது நாளாக டெல்லியில் உள்ள முக்கிய சாலையை மறித்து உத்தரபிரதேசம்,பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். டெல்லியில் டிராக்டர் பேரணியும் நடைபெற்றது. வரும் குடியரசு தினத்தன்று டிராக்டர் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று விவசாயிகள் 10 ஆம் கட்டமாக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது.அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 22 ஆம் தேதி நடைபெரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே எக்காரணம் கொண்டும் இச்சட்டங்களை திரும்பப் பெற மாட்டோம், இச்சட்டங்களை நீக்கமுடியாது. ஆனால் சில திருத்தங்கள் செய்யவுள்ளதாகக் மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்ட நிலையில்,  தற்போது மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களை ஒன்று முதல் ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கத்தயார் என தெரிவித்துள்ளார்.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்