டிராபிக் அபராதம் செலுத்தாத வாகன ஓட்டுநர்களுக்கு சலுகை

திங்கள், 6 நவம்பர் 2017 (14:03 IST)
துபாயில் 2016ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு விதிக்கப்பட்ட டிராபிக் அபராதங்களை செலுத்தாத வாகன ஓட்டுநட்கள் 2017ஆம் ஆண்டுக்குள் செலுத்தினால் 50% வரை சலுகை வழங்கப்படும் என காவல்துறை அறிவித்துள்ளது.


 

 
துபாய் காவல்துறை போக்குவரத்து பிரிவு தலைவர், அபராதம் செலுத்தாத வாகன ஓட்டுநர்களுக்கு சலுகை ஒன்றை அறிவித்துள்ளார். போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 2016ஆம் ஆண்டு அல்லது அதற்கு முன்பு விதிக்கப்பட்ட அபராதங்களை இன்றுவரை செலுத்தாமல் உள்ளவர்களுக்கு சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதாவது அபராதத்தை 2017ஆம் ஆண்டுக்குள் செலுத்தினால் 50% வரை சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு நிதி ஆண்டில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், நேரடியாக அபராதம் செலுத்தும்போது 50% சலுகை வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்