ட்ரம்ப் அறிவிப்பால் இந்தியப் பெண்கள் வேலை இழக்கும் அபாயம்

வியாழன், 9 மார்ச் 2017 (13:53 IST)
ஹெச்1-பி விசா கட்டுப்பட்டைத் தொடர்ந்து ஹச்4 வகை விசாவிற்கு கட்டுப்பாடுகளை அதிபர் டொனால்டு விதித்துள்ளார். இதனால் இந்திய பெண்கள் சட்டப்பூர்வமாக வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


 

 
குறிப்பிட்ட நாடுகள் அமெரிக்காவில் நுழைய தடை மற்றும் ஹெச்1-பி வகை விசாவிற்கான கட்டுபாடு ஆகியவற்றை விதித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு உலகம் முழுவதும் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையான முடிவை எடுத்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து செல்பவர்களது மனைவி, கணவர் ஆகியோர் வேலை செய்யலாம் என முன்னாள் அதிபர் ஓபாமா அவர் பதவியில் இருந்த காலத்தில் தெரிவித்தார்.
 
இதற்கு அப்போதே அமெரிக்காவின் வேலை காப்பகம் என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தது. ஆனால் முறையான காரணங்கள் இல்லததால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது மீண்டும் அந்த அமைப்பு சார்பில் வழக்கு தொடங்கப்பட்டுள்ளது.
 
இதற்கு அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஹெச்4 விசாவில் குடியேறுபவர்களுக்கு வேலை செய்ய அனுமதிக்கூடாது என கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.
 
இதானால் இந்தியாவில் இருந்து திருமண ஆன பின் கணவனுடன் சென்று அங்கு பணிபுரியும் பெண்கள் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த இந்தியா நாட்டுக்கு மட்டுமல்ல அனைத்து வெளிநாட்டினருக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஹெச்1-பி விசாவில் செல்பவர்கள் தங்களது மனைவி அல்லது கணவரை ஹெச்4 விசா மூலம் அழைத்து செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த ஹெச்4 விசா கட்டுபாடு மூலம் பெரும்பாலான வெளிநாட்டினர் தங்களது குடும்பத்தை அழைத்து செல்வதை தவிர்பார்கள் அல்லது பொருளாதாரம் நெருக்கடியால் அமெரிக்கா செல்வதை தவிப்பார்கள்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்