இந்த நிலையில், ராணுவ ஆட்சியை எதிர்த்துப் போராட்டிய ஆன் சான் சூயி, கடந்த 2020 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பு ஏற்றார். இதை மறுத்து, ராணுவத்தினர் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி, கடந்தாண்டு பிப்ரவரியில் ஆட்சி கலைக்கப்பட்டது. எனவே ஆங் சான் சூயி வீட்டு காவலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், ராணுவத்திற்கு எதிராகக் போராட்டத்தை தூண்டியது, கொரொனா கால விதிகளை மீறியது, அவர் ஆட்சியில் நடந்த ஊழல் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர் மீது வழக்குகள் தொடுக்கப்ட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த மியான்மர் நீதிமன்றம், ஆங் சன் சூயின் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்து, அவருக்கு 4 ஆண்டுகள் சிறை வழங்கியது. இதையடுத்து, அவருக்கு பல்வேறு வழக்குகள் மீதான வழக்கில் அவருக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது, தேர்தல் மோசடி வழக்கில் அவருக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டை வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.