சீனாவின் டீப் சீக் என்ற ஏஐ, சாட் ஜிபிடி, ஜெமினி ஆகியவற்றையெல்லாம் ஓரம் கட்டி விட்டு உலகின் முன்னணி இடத்தை பிடித்ததாக கூறப்படும் நிலையில் சீனாவின் இன்னொரு ஏஐ அறிமுகம் ஆகி இருப்பதாகவும் அது டீம் சீக்-ஐ விட நல்ல ரிசல்ட் தருவதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவனம் Qwen 2.5-Max என்ற ஏஐ மாடலை அறிமுகம் செய்துள்ளது. சாட்ஜிபிடி மற்றும் டீப்சீக்-ஐ விட இது சிறப்பாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அலிபாபாவின் கிளவுட் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் "Qwen 2.5-Max என்ற ஏ.ஐ. மாடல் GPT-4o, DeepSeek-V3 மற்றும் Llama-3.1-405B ஐ விட சிறப்பாக செயல்படும் என கூறியுள்ளது.