ஆசிரியரின் செக்ஸ் டார்ச்சர் 8 வது மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை

புதன், 27 ஜூன் 2018 (07:19 IST)
சீனாவில் ஆசிரியர் ஒருவர் கொடுத்த செக்ஸ் டார்ச்சரால் மாணவி ஒருவர் 8 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் குயிங்யாங் நகரை சேர்ந்த லீ என்கிற 19 வயது பள்ளி மாணவி அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். அவரை பள்ளி ஆசிரியர் ஒருவர் செக்ஸ் டார்ச்சர் செய்துள்ளார். மாணவியை கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது போன்ற கீழ்தரமான செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
 
இதனால் மனமுடைந்த அந்த மாணவி அங்குள்ள ஒரு உயரமான கட்டிடத்துக்கு சென்று, 8 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முற்பட்டார். அப்போது கீழே இருந்த சில மனிதமற்ற மிருகங்கள் இதனை தடுக்காமல் மாணவியை சீக்கிரம் கீழே விழுந்து சாவு என கூறியுள்ளனர்.
இதனால் மேலும் மனமுடைந்த அந்த மாணவி கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள போலீஸார் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர் அளித்த அந்த ஆசிரியரையும் மாணவியை தற்கொலைக்கு தூண்டிய அந்த மனிதமற்ற மிருகங்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்