ஏமனில் அதிபர் அப்த்ராபுய் மன்சூர் ஹதி அரசுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சி படைகளுக்கும் இடையே கடந்த 2015 முதல் நடைபெற்று வந்த உள்நாட்டு போரில் 10 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். இதில் 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பட்டினியால் வாடுகின்றனர். தற்போது குழ்ந்தைகள்தான் அதிக ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.