மேற்கு மெக்சிகோவில் இன்று அதிகாலையில், 42 பயணிகளுடன் பேருந்து ஒன்று, அமெரிக்க நாட்டின் எல்லையில் உள்ள டிஜுவானா நகருக்குச் சென்று கொண்டிருந்தது.
இப்பேருந்து, மாநில தலைநகரான டெபிக்கிற்கு நெடுஞ்சாலையில் பர்ரான்கா பிளாங்கா அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே 18 பேர் பலியாகினர். 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.