இந்த உலகில் இளைஞர் முதல் முதியோர் வரை பலரும் சாதிக்க நினைக்கிறார்கள். ஆனால், எப்படியும் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள், அதற்கான செயல்களில் ஈடுபட்டு, தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு தங்கள் துறையில் சாதிக்கிறார்கள்.
இந்த நிலையில், ஐக்கிய அமெரிக்காவின் இலினொய் மாநிலத்தில் உள்ள ஒரு மாநகரம் சிகாகோ. இப்பகுதியைச் சேர்ந்த 104 வயது மூதாட்டி டோரோத்தி என்பவர், ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்துள்ளார்.