250 கேரக்டர்கள் மட்டுமே ட்விட் செய்ய வேண்டும் என்று தற்போது இருக்கும் நிலையில் கட்டணம் செலுத்தும் பயனர்கள் 4000 கேரக்டர் வரை தற்போது ட்விட் செய்ய முடிகிறது. இந்த நிலையில் கட்டணம் செலுத்தும் பயனர்கள் 10,000 கேரக்டர் வரை ட்விட் செய்யும் புதிய வசதி தற்போது அறிமுகம் ஆகிறது. மேலும் இந்த டிவிட்டை 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் வசதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.