அம்ருதா உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த பினராயின் பெற்றோர் அவர்களின் திருமணத்தை எதிர்த்துள்ளனர். ஆனால் பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில்,அவரது கணவரான பினராய் அம்ருதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இருவரும் மருத்துவமனை வாசலில் சென்றபோது அவர்களை பின்தொடர்ந்து வந்த நபர் ஒருவன், பினராயின் தலையில் இரும்புகம்பியால் பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.
இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகியிருந்தது. இது குறித்து போலீசார் விசாரித்த போது , அம்ருதா உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்த பினராயியை காதலித்தது, அம்ருதாவின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை. இதனால் அம்ருதா வீட்டிலிருந்து வெளியேறி பினராயியை திருமணம் செய்து கொண்டனர்.