தாளிக்க தேவையான பொருட்கள்:
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்து - 1 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
முந்திரி பருப்பு - 10
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன்
மாங்காய் துருவல் - பாதி மாங்காய் (பெரியது)
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, முந்திரி, பொடியாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை , மஞ்சள் தூள் , இந்த பொருட்களை எல்லாம் போட்டு சிவக்க வறுத்து கொள்ள வேண்டும்.
பின்னர் வெங்காயம் வதங்கி வந்த உடன் துருவி வைத்திருக்கும் மாங்காயை இந்த எண்ணெய்யில் போட்டு 2 நிமிடம் வரை வதக்க வேண்டும். மாங்காய் குழைய வதங்க வேண்டாம். அடுத்தபடியாக தேங்காய் துருவல் , சாதத்திற்கு தேவையான அளவு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு நிமிடம் போல வதக்கி, வடித்த சாதத்தை கடாயில் இருக்கும் மாங்காயோடு கொட்டி ஒரு முறை நன்றாக கலந்து விடுங்கள்.