சுவை மிகுந்த கருணைக்கிழங்கு புளிக்குழம்பு செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
கருணைக்கிழங்கு - 500 கிராம்
புளி - 1 எலுமிச்சை அளவு
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
பட்டை - ஒரு இன்ச் அளவு
சோம்பு - 1 டீஸ்பூன்  
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
துருவிய தேங்காய் - 100 கிராம்  
இஞ்சி - அரை இன்ச்
கிராம்பு - 2
நெய் - 1 மேஜைக்கரண்டி,
மிளகு - 1 டீஸ்பூன்
 

செய்முறை:
 
கழுவி சுத்தம் செய்த கருணைக் கிழங்கை பாத்திரத்தில் போதுமான தண்ணீரில் வேக வைத்துக் கொள்ளவும்.

கடாயில் சுமார் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் பட்டை, கிராம்பு, சோம்பு, நறுக்கிய இஞ்சி, துருவிய தேங்காய் சேர்த்து வதக்கவும். அதனுடன் மிளகு, கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும். 
 
சூடு ஆறியவுடன் நன்கு மைய அரைக்கவும். மீதமுள்ள நெய்யில் கடுகு, உளுந்தப் பருப்பைச் சேர்த்து தாளிக்கவும். கூடவே மஞ்சள்தூள், கறிவேப்பிலையைச் சேர்க்கவும். அதனுடன் வேக வைத்து தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிய கருணைக் கிழங்கை சேர்த்து வதக்கவும். 
 
இதனுடன் அரைத்து வைத்த விழுதைக் பிரட்டவும். கரைத்து வைத்த புளித் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க வைத்து, போதுமான தண்ணீர், உப்பு சேர்த்து குழம்பை  நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். சுவை மிகுந்த கருணைக்கிழங்கு புளிக்குழம்பு தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்