செய்முறை:
மிதமான சூடுள்ள தண்ணீரில் ஈஸ்ட் போட்டு கலந்து 5 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்கவும். மாவுடன் உப்பு, சர்க்கரை, பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து வைக்கவும். பின் அதில் ஈஸ்ட் கரைசலை ஊற்றி அத்துடன் ஆயில் சேர்த்து சாப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு அழுத்தி பிசைந்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு எண்ணெய் தடவிய பாத்திரத்தில் பிசைந்த மாவை போட்டு 4 மணி நேரம் மிதமான சூடுள்ள இடத்தில் வைத்திருக்கவும். பின் ஒரு பாத்திரத்தில் கட் செய்த மொற்சரில்லா சீஸ், உதிர்த்த ஃபிட்ட சீஸ், பொடியாக வெட்டிய கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
ரவுன்டாக உருட்டிய மாவின் நடுவில் கால் டீஸ்பூன் ஆயில் விடவும். அதன்மேல் ஒரு தேக்கரண்டி சீஸ் கலவையை வைத்து, சிறிது மைதாமாவை தண்ணீரில் கலந்து பேஸ்ட்டாக்கி ஓரம் முழுவதும் தடவும். அதேபோல் அடுத்தபுறமும் மடக்கிவிட்டால் இதுமாதிரி சதுரவடிவில் பைபோல் கிடைக்கும்.