ரஜினிக்கு எதிர்ப்பு ; கமலுக்கு நேரில் ஆதரவு : அதிரடி காட்டும் சீமான்

செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (12:06 IST)
அரசியலில் அடி எடுத்து வைத்திருக்கும் நடிகர் கமல்ஹாசனை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காலை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

 
அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், வருகிற 21ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தனது பயணத்தை துவங்குவதாக அறிவித்துள்ளார்.  
 
மேலும், முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன்,மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தனிச்செயலாளராக பணியாற்றிய, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான செல்வராஜ், இந்திய கம்யூனிஸ் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, திமுக தலைவர் கருணநிதி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை அவர் சந்தித்து பேசினார்..
 
இந்நிலையில், இன்று காலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் வீட்டிற்கு சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
 
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான் “ தமிழக அரசியல் மோசமான நிலையில் இருக்கிறது. ஏதேனும் ஒரு மாற்றம் நடைபெறாதா என என்னை போன்ற சிலர் முயற்சி செய்து கொண்டிருக்கும் வேளையில், நடிகர் கமல்ஹாசன் வந்துள்ளார். அவர் என்னை சந்திக்க வேண்டும் என கேட்ட போது, அது முறையல்ல என்பதால் நானே அவரை  நேரில் சந்தித்து வாழ்த்த வந்தேன்” எனக் கூறினார்.
 
அப்போது பேசிய கமல்ஹாசன் “எனது அரசியல் பயணத்திற்கு வாழ்த்து சொல்ல சீமான் வந்துள்ளார். எனது கொள்கை என்ன என்பது அவருக்கு தெரியாது. எனது சினிமாதான் அவருக்கு தெரியும். வருகிற 21ம் தேதி நான் அறிவிக்கும் எனது கொள்கைகளைப் பற்றி தெரிந்து கொண்ட பின்பே என்னுடன் இணைந்து செயல்படுவது பற்றி அவர் முடிவு செய்வார்” எனக் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்