இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர்கள் எல்லாம் இருக்கார்களா?

vinoth

செவ்வாய், 1 அக்டோபர் 2024 (07:19 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் ஆறாம் தேதி தொடங்க இருக்கிறது. கடந்த 7 சீசன்களாக இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், அதில் இருந்து விலகிக் கொண்டார். இப்போது அவருக்குப் பதிலாக நடிகர் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார்.

நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகும் போட்டியாளர்கள் யார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அது குறித்த சில பெயர்கள் தற்போது வெளியாகியுள்ளன.

பிரபலங்களான விடிவி கணேஷ், பப்லு பிரித்விராஜ், சுனிதா கோகாய், அன்ஷிதா, ரவீந்தரன், அமலா ஷாஜி, பரினா ஆசாத், பவித்ரா ஜனனி உள்ளிட்டோர் போட்டியாளர்களாகக் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்