சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, "தினசரி பல சிறு சிறு கட்சிகள் உருவாகின்றன. ஆனால், திருவிழாவில் வரும் வான வேடிக்கை போல், சிறிது காலத்தில் அந்த கட்சிகள் காணாமல் போய்விடும். நம்மை எதிர்க்கும் ஒரே கட்சி அதிமுகவாக மட்டுமே இருக்க வேண்டும், அந்த அதிமுகவையும் எதிர்க்கும் சக்தி நம்மிடம் உள்ளது. எனவே, மீண்டும் திமுக ஆட்சியே தொடரும்" என்று கூறினார்.
அமைச்சர் துரைமுருகன் "சின்ன சின்ன கட்சிகள்" என்று கூறியது, விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தையே மறைமுகமாக குறிக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பேசியபோது, "தேர்தல் வரை இனி எதிர்க்கட்சி தலைவர் விஜய் தான்" என அவர் கூறியது, திமுகவுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Edited by Siva