பிரதமரை நேரில் சந்தித்த ஆளுநர் ஆர்.என்.ரவி.. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை..!

Mahendran

செவ்வாய், 24 டிசம்பர் 2024 (13:05 IST)
தமிழக ஆளுநர் ஆர். என். ரவி நான்கு நாள் பயணமாக டெல்லி சென்ற நிலையில், பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக ஆளுநர் நான்கு நாள் பயணமாக டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், இன்று டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் ஆளுநர் ரவி, மோடியை சந்தித்து பேசினார். தமிழகத்தின் அரசியல் சூழல் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து பிரதமர் மோடியுடன் ஆளுநர் ரவி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

ஜனவரி 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபை நடைபெற இருக்கும் நிலையில், பிரதமர்-ஆளுநர் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த சந்திப்பு முடிந்த பின்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட சில முக்கிய பிரமுகர்களை ஆளுநர் சந்திக்கவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்