அனிமல் பட இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கத்தில் நடித்த தோனி… வைரலாகும் புகைப்படம்!

vinoth

செவ்வாய், 18 மார்ச் 2025 (15:51 IST)
இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா ரன்பீர் கபூரைக் கதாநாயகனாக வைத்து  இயக்கிய அனிமல் திரைப்படம் கடந்த ஆண்டு ரிலீஸாகி சுமார் 900 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தது. இந்த படத்தில்  முக்கியக் கதாபாத்திரங்களில் பாலிவுட் நடிகர்களான அனில் கபூர் மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர். அனிமல் படம் பெண்ணடிமைத் தனத்தை விதந்தோதுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனாலும் அதையெல்லாம் மதிக்காமல் கரடுமுடாகப் பதிலளித்து வந்தார் இயக்குனர் சந்தீப் ரெட்டி. இந்நிலையில் இப்போது இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனி அவர் இயக்கத்தில் ஒரு விளம்பரத்தில் நடித்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளன.

மோட்டாரட் என்ற இந்த நிறுவனத்தில் கடந்த ஆண்டு தோனி முதலீடு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விளம்பரத்தில் தோனி, அனிமல் படத்தில் ரன்பீர் கபூர் நடித்த கெட்டப்பில் நடித்துள்ளார் என்பதுதான் விளம்பரம் அதிக கவனம் பெற காரணமாக அமைந்துள்ளது. 

MS DHONI BANGER DROPS. ????

- What a wonderful Ad by EMotorad with MSD and Sandeep Reddy Vanga. ???????? pic.twitter.com/0AN6efQWnk

— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 18, 2025

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்