யாஷ் பட ஷூட்டுக்காக 100 மரங்களை வெட்டிய படக்குழு… அமைச்சர் குற்றச்சாட்டு!

vinoth

வியாழன், 31 அக்டோபர் 2024 (09:08 IST)
யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவர் தன்னுடைய அடுத்த படத்தைத் தொடங்காமல் இருந்தார். இந்நிலையில் தற்போதுதான் யாஷின் அடுத்த படமான டாக்ஸிக் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் தொடங்கியது.

கேவிஎன் ப்ரடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் முதல் பெங்களூருவில் தொடங்கியது. இந்த படத்தில் யாஷின் சகோதரி வேடத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. நயன்தாரா சில பாலிவுட் நடிகைகளும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது விறுவிறுப்பாக இந்தபடத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் செட் அமைப்பதற்காக 100 மரங்களை வெட்டியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது சம்மந்தமாக அமைச்சர் ஈஸ்வர் காந்த்ரே ”மரங்களை வெட்டியது சட்ட விரோதமான செயல்” என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்