பிறந்த நாளில் வெளியான விஜய்சேதுபதி படத்தின் போஸ்டர்!

சனி, 16 ஜனவரி 2021 (12:40 IST)
பிறந்த நாளில் வெளியான விஜய்சேதுபதி படத்தின் போஸ்டர்!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அவர் நடித்து முடித்துள்ள ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது 
 
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்க உள்ளன. அந்த வகையில் தற்போது அட்டகாசமான போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
விஜய் சேதுபதி ஜோடியாக முதல்முறையாக மேகாஆகாஷ் நடிக்கும் இந்த படத்தில் இயக்குனர்கள் மோகன் ராஜா மற்றும் மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையில் வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவில் உருவாகி உள்ள இந்த படம் இந்த ஆண்டின் எதிர்பார்ப்பிற்குரிய திரைப்படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்