நடிகர்களின் மகன்கள் மட்டுமில்லை, திரையுலகைச் சேர்ந்த யாருடைய மகன்களும் ஹீரோவாகவே விரும்புகின்றனர். நடிகர் ஆனந்த்ராஜின் மகன் தேஜ் ராஜும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
விஷுவல் கம்யூனிகேஷன் முடித்த பின், பாலுமகேந்திராவின் பள்ளியில் நடிப்புப் பயின்று, சினிமாவுக்கு தயாராக வந்துள்ளார்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் ரொமான்டிக் கம் ஆக்ஷன் ஹீரோவாக அறிமுகமாக வேண்டும் என்று ஆசைப்பட்டவரை அழைத்து தனது அனுபவ அறிவால் சின்ன பட்ஜெட் படத்தில் நடித்து முதலில் பெயர் வாங்கு என்று மாற்றியிருக்கிறார் தந்தை ஆனந்த்ராஜ்.
விரைவில் படம் குறித்தும், இயக்குநர் குறித்தும் அறிவிப்போம் என்றார் தேஜ் ராஜ்.