சில நாட்களுக்கு முன்னர் சின்னத்திரை நடிகர் சித்ரா தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து சின்னத்திரை நடிகர்கள் இதுபோல தற்கொலை செய்துகொள்வது கவலையளிக்கும் விதமாக உள்ளது. இதுபற்றி இன்று கருத்து தெரிவித்துள்ள நடிகர் விவேக் யாருமே தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி நடிகைகள் அல்ல, யாருமே தற்கொலை செய்துகொள்ளக் கூடாது. அது கோழைகளின் முடிவு. ஒரு நொடியில் எடுக்கக்கூடிய தவறான முடிவுதான் தற்கொலை. அதையும் மீறி வாழ்க்கையில் ஜெயித்தவர்கள்தான் அதிகம். 100 பேரில் 90 பேருக்குத் தற்கொலை எண்ணம் வந்து போயிருக்கும்.. அதைத் தவிர்த்துவிட்டால் வாழ்க்கையில் அடுத்த திருப்பத்தில் வெற்றி காத்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.