விஷால் நடிப்பில் ஆனந்த ஷங்கர் இயக்கும் புதிய படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஐதராபாத்தில் நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் விஷாலின் நெருங்கிய நண்பர் ஆர்யா நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே இருவரும் இரும்புத்திரை படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் அதன் பிறகு அந்த கதாபாத்திரத்தில் அர்ஜுன் நடித்தார்.