பிரபல வில்லன் நடிகர் இறந்ததாக வதந்தி.. வீடியோ வெளியிட்டு அவரே விளக்கம்..!

செவ்வாய், 21 மார்ச் 2023 (16:13 IST)
பிரபல வில்லன் நடிகர் இறந்ததாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவிய நிலையில் அவரே வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்
 
விக்ரம் நடித்த சாமி, விஜய் நடித்த திருப்பாச்சி உள்பட பல திரைப்படங்களில் வில்லன் வேடத்தில் நடித்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். இவர் திடீரென இன்று இறந்து விட்டதாக இணையதளங்களில் வதந்தி பரவியது. 
 
இதனை அடுத்து ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் கோட்டா சீனிவாச ராவ் வீடியோ ஒன்றை வெளியிட்டு தான் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். 
 
தன்னுடைய மரணம் குறித்த செய்தி பொய்யானது என்றும் ரசிகர்கள் அதை நம்ப வேண்டாம் என்றும் தான் நலனுடமும் வலுவுடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்