வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியவருக்கு ஜாமின்! பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய் உத்தரவு..!

செவ்வாய், 21 மார்ச் 2023 (12:59 IST)
தமிழகத்தில் தங்கியிருக்கும் வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பிய பீகார் சேர்ந்த ஒருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு தற்போது மதுரை ஹைகோர்ட் கிளை நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. வடமாநிலத்தில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் தமிழகத்தில் தங்கி இருந்து வேலை செய்து வரும் நிலையில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய உத்தர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாந்த் உமாராவ் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். 
 
இந்த நிலையில் அவர் தனக்கு ஜாமீன் வேண்டி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் 15 நாட்கள் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
மேலும் ஜாமீன் பெற்ற பிரசாந்த் உமாராவ் தூத்துக்குடியில் தங்கியிருக்க வேண்டும் என்றும் தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
அதுமட்டுமின்றி இனி இது போன்ற வதந்தி வீடியோ செய்திகளை பரப்ப மாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்