கன்னட சினிமாவின் பிரபல நடிகை அனு பிரபாகர். இவர், முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும்போது, கடந்த 2002 ஆம் ஆண்டு கன்னட சினிமா நடிகை ஜெயந்தியின் மகன் கிருஷ்ணகுமாரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிலையில், நீண்ட நாட்கள் கழித்து, தன் முதல் திருமண முறிவு குறித்து ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அதில், திருமணத்திற்குப் பிறகும் நடிப்பதைக் கைவிடக்கூடாது என்று நடிகை ஜெயந்தி என்னிடம் கூறினார். ஒருகட்டத்தில் மாடர்ன் உடைகள் அணியும்படி கூறியதால் எனக்கும் என் கணவருக்கும் இடையில் 3 வதாக ஒரு நபர் புகுவதை நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.