இந்த படத்தின் படப்பிடிப்பில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
கோல்ட்மேன் மைண்ட் என்ற நிறுவனம் விக்ரம் படத்தின் இந்தி டப்பிங் உரிமையை ரூபாய் 31 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 70 கோடி என்று கூறப்படும் நிலையில் கிட்டத்தட்ட பாதி பட்ஜெட்டில் இந்தி டப்பிங் உரிமை மட்டும் விற்பனையாகியுள்ளது கோலிவுட் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது