இப்போது மீண்டும் சில காட்சிகளை படமாக்கி படத்தை முடித்துள்ளதாக தெரிகிறது. அதையடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டார் எனவும் சொல்லப்படுகிறது. இதனால் படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. படத்தை விஜய்யின் லியோ பட தயாரிப்பாளர் லலித்குமார் ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லபடுகிறது.
இந்நிலையில் இப்போது படத்தின் கதையில் பெரிய மாற்றம் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப் படுத்துவது இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்த படத்தில் இருந்து ஏற்கனவே ஒருமனம் என்ற பாடல் வெளியாகி இருந்தது. அதில் விக்ரம், ரிது வர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இப்போது அந்த பாடலில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷின் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.