யாருக்கும் தெரியாமல் கூட்டத்தோடு சர்கார் படத்தை பார்த்த விஜய் - ஷாக் ஆன ரசிகர்கள

வியாழன், 8 நவம்பர் 2018 (16:27 IST)
விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் 3- வது முறையாக உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அரசியல் படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் ராதாரவி வில்லன் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். 
 
 
இப்படம் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை நடத்தி வருகிறது. அந்த வகையில் விஜய் மிகவும் சந்தோஷத்தில் உள்ளார்.
 
இந்நிலையில் தற்போது தளபதி விஜய் பிரபல திரையரங்கில் தன் ரசிகர்களுடன் சேர்ந்து சர்கார் பட   கொண்டாட்டத்தை பார்த்துள்ளார்.
 
அப்போது அவர் ரசிகர்களோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம்  சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது. இந்த புகைபடத்தை பார்த்த பலரும்  இது விஜய் தானா, சர்கார் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்டதா என பல கேள்விகளை  எழுப்பி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்