சர்கார் சர்ச்சை: அமைச்சர்களின் அடுக்கடுக்கான குற்றசாட்டு..!

வியாழன், 8 நவம்பர் 2018 (13:16 IST)
அரசுக்கு எதிராக மக்களிடையே வன்முறையை தூண்டும் வகையில், நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படதின் ஒட்டுமொத்த குழுவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரித்திருந்தார் . 
இந்நிலையில் தற்போது சர்கார் படத்தின் சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்து அமைச்சர்  சி.வி.சண்முகம், தலைமை செயலகத்தில் உள்ள பிற அமைச்சர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 
 
இந்தப்படத்தில் தமிழக அரசியல் சூழல் குறித்து உள்நோக்கத்துடன் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் அரசியல்வாதிகளுக்கிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர்  சி.வி.சண்முகம், "சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் இருப்பதால் ஆலோசனைக்கு பிறகு பட தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரையரங்குகள் மீது வழக்குபதிவு செய்யப்படும் என எச்சரித்துள்ளார் . 
 
சர்கார் திரைபடக்குழுவினர் தீவிரவாதிகள் போன்று செயல்படுகிறார்கள்" என தெரிவித்திருந்தார். 
 
தற்போது  அமைச்சர்  சி.வி.சண்முகம், தலைமை செயலகத்தில் அமைச்சர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்த ஆலோசனையில் சர்கார் படம் குறித்து பல அமைச்சர்கள் அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டை முன்வைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்